கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக வதந்திகளை பரப்ப வேண்டாம் – அமைச்சர் சிவசங்கர் பேச்சு!

கேளம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக பல்வேறு கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் எழுந்து வரும் நிலையில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் இன்று பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது பேருந்துகளின் இயக்கம், அட்டவணை, ஓட்டுநர், நடத்துனர் வருகை குறித்து கேட்டறிந்தார். அதன் பிறகு பேருந்துகளுக்காக காத்துக் கொண்டிருந்த பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்த போது, பேருந்துகள் குறைவாக இயக்கப்படுவதாகவும், பேருந்துகளின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும் எனவும், கிளாம்பாக்கத்தில் இருந்து பேருந்து கட்டணம் அதிகமாக உள்ளதாகவும், அவற்றைக் குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். இதற்கு பதில் அளித்த அமைச்சர் சிவசங்கர் விரைவில் பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

“அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சிவசங்கர், கோயம்பேட்டில் இருந்து எத்தனை பேருந்துகள் இயக்கப்பட்டனவோ அதே எண்ணிக்கையில் கிளாம்பாக்கத்தில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படும். தற்போது அரசு விரைவு போக்குவரத்து கழகம் 361 பேருந்துகளை இயக்கி வருகிறது. அரசு போக்குவரத்து கழகம் 734 பேருந்துகள் ஏற்கனவே இயக்கிக் கொண்டிருந்தது. மேலும் நாளை கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும். விரைவில் கோயம்பேட்டில் எத்தனை பேருந்துகள் இயக்கப்பட்டனவோ அதே எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படும். எனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக யாரும் வதந்திகளை பரப்ப வேண்டாம்.” எனத் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *